மினுவங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த பொலன்னறுவ, வெலிகந்த தனிமைப்படுத்தல் முகாமிற்கு பேருந்து ஒன்றில் அழைத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா, உடபிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய அருணாகாந்தி எனும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாக ஒருவருடைய குடும்பத்தாரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்து சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கந்தக்காடு பகுதியில் வைத்து பெண் ஒருவர் திடீரென சுகவீனமுற்றதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் குறித்த பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.