உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள்..!
கல்வி பொது தராதர உயர் தர மாணவர்களுக்கு இன்று இடம்பெறவுள்ள கணக்கீட்டு பரீட்சையில் சாதாரண கணிப்பானை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் 638 பரீட்சை மத்திய நிலையங்கள் உள்ளன.
குறித்த பரீட்சை நிலையங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து பரீட்சை நிலையங்களுக்கும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடரூந்து திணைக்களமும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.