Our Feeds


Friday, October 16, 2020

www.shortnews.lk

ரியாஜின் ரிட் மனுவை நிராகரியுயுங்கள் - கர்த்தினால் மல்கம் ரஞ்சித் இடையீட்டு மனு தாக்கல்

 

 


தான் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடக்கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனின் சகோதரன் ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மெல்கம் கர்தினால் ரஞ்ஜித்  சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ள லோரன்ஸ் ரமநாயக்க அருட்தந்தை, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன் என்ற சந்தேக நபருக்கு எதிராக போதுமான சாட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தாக கூறினார்.

இப்படியிருக்கையில் அவரை விடுவிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தாம் மீண்டும் கைது செய்யப்படுவதை எதிர்த்து ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை இந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மனுதார் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குறித்த மனு அவசர தேவை கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தால் அதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி குறித்த மனுவை இந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »