முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் ஒரே இரவில் வான் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய விமானப்படைகள் காசாவில் அமைந்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தாக்குதலினால் உண்டான சேத விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.