பொலன்னறுவ மாவட்டத்திற்குட்பட்ட பகமுன பகுதியில் வடை விற்பனை கடை ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பகமுன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.
குறித்த நபர் கடந்த தினங்களில் இறால் வாங்குவதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.