பயங்கரவாதிகள் வேறு முஸ்லிம்கள் வேறு இரண்டையும் சேர்த்து குழப்பமடையக்கூடாது எனவும் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை என்றும் பிரான்சுக்கான முன்னாள் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்ட் இன்று வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த பயங்கரவாதிகளை முஸ்லிம்களுடன் முடிச்சுப்போட வேண்டாம். நாங்கள் தொட விரும்பாத ஒரு மோதலில் நம்மை மூழ்கடிப்பது தவறுதான் என்று முன்னாள் ஜனாதிபதி எல்.சி.ஐ தொலைக்காட்சியின் நிகழ்வில் கூறினார்.
நேற்று பிரான்ஸில் நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.