திருமணத்தின் போது பெண்களிடம் வரதற்சனை - சீதனமாக பணம், பொருளை மணமகன் தரப்பினர் பெற்றுக் கொள்வதை தடை செய்து சட்டம் இயற்சியுள்ளது பாகிஸ்தான்.
பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக ஆண் தரப்பிலிருந்து பெறப்படும் வரதற்சனை அல்லது சீதனம் எனப்படும் குறித்த செயல்பாடு இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாம் கண்டிக்கும் செயல்பாடாகும். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் இது நடைமுறையில் இருந்து வருகிறது.
குறிப்பாக கீழைத்தேய, தென்னாசிய நாடுகளில் இது பகிரங்கமாக நடைபெற்று வருகின்றது.
இலங்கை போன்ற நாடுகளில் திருமண பதிவின் போதே எவ்வளவு சீதனம் வழங்கப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் எழுத்தில் நடைமுறை வைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்திற்கு மாற்றமான இந்த செயல்பாட்டை முஸ்லிம்கள் செய்து வருவதை கண்டித்து முன்னோடி இஸ்லாமிய அமைப்புகள் சில தொடர் பிரச்சாரங்களையும், விளிப்புணர்வுகளையும் செய்து வருவதும் குறிப்பிடத் தக்கதாகும்.
அந்த வகையில் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்றான்கான் வரதற்சனை - சீதனத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளார்.
இதே வேலை இதில் விதிவிலக்காக திருமணத்தின் போது மணமகள் தரப்பினர் விரும்பினால் மணமகனுக்கு ஆடைகளும், படுக்கை விரிப்புகளும் மட்டும் அன்பளிப்பாக வழங்க முடியும்.
அதுவும், திருமணம் விவாகரத்தில் முடிந்தால் அவற்றை மணமகன் திருப்பி கொடுக்க வேண்டும் என்று குறித்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.