Our Feeds


Thursday, October 22, 2020

www.shortnews.lk

இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது – மைத்ரி அதிரடி அறிவிப்பு !

 



அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம் நாடாளுமன்றில் நிறைவேற நடக்கும் வாக்கெடுப்பில் தம்மால் வாக்களிக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , ஜனாதிபதி கோட்டாபய , பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

“ 19 ஆவது திருத்தத்தை கொண்டுவர முன்னிலையில் இருந்தவன் என்ற ரீதியில் மனச்சாட்சியின்படி என்னால் 20 ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது.அதற்காக வருத்தத்தை தெரிவிக்கிறேன்” என்றும் மைத்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இன்று மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை மைத்ரி சாட்சியமளிக்கவுள்ளதாக அறியமுடிந்தது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »