Our Feeds


Sunday, October 25, 2020

www.shortnews.lk

கல்முனையில் பள்ளிவாசல்களை மூடியதற்கு நான் பொறுப்பில்லை - கல்முனை மேயர் ஏ.எம் ரக்கீப்

 



(சர்ஜுன் லாபீர்)


கல்முனையில் தற்போதைய கொரோனா தாக்கத்தினால் மதஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்காக நேற்று கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது முப்படைகளின் உயர் அதிகாரிகள்,சுகாதார வைத்திய அதிகாரிகள்,துறைசாந்தோர் உள்ளிட்ட மேல் அதிகாரிகளினால் எடுக்கப்பட்ட முடிவே தவிர என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல.என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..

பள்ளிவாசல்களில் தொழுகைக்காக வருவோர்கள் அனேகமாக வயோதிபர்கள் அதேநேரம் பள்ளிவாசல்களில் வருவோர் எல்லோரும் தரைவிரிப்பு கொண்டு செல்வதில்லை அதனால் ஒருவர் தொழும் இடத்தில் அவர் சுஜுது செய்யும் போது அவ்விடத்தில் சுவாசிக்கும் நிலை ஏற்படும் அதே நேரம் அந்த இடத்தில் இன்னும் ஒருவர் தொழும் போது அந்த தொற்று பரவுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதனாலேயே பள்ளிவாசல்களை மூடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதே தவிர இத் தீர்மானம் என்னால் மாத்திரம் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல.என்பதோடு இதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

இன்று முகநூல்களிலும் ஏனைய சமூக வலைத்தளங்களிலும் கல்முனை மாநகர முதல்வராகிய தான் தனிப்பட்ட ரீதியில் மேற்படி முடிவு எடுத்ததாக வேண்டும் என்றே என்மீது பழி சுமர்த்துகின்றார்கள் என கல்முனை முதல்வர் ரக்கீப் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »