Our Feeds


Friday, October 30, 2020

www.shortnews.lk

இலங்கையில் காற்று மாசு: முகக்கவசம் ‎அணியுமாறு அறிவுறுத்தல்

 

 இலங்கையில் வளி மாசுபாட்டின் அளவு அசாதாரணமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் காற்றின் தர அளவீட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள துகள்களின் அளவு கடந்த 27ஆம் திகதி முதல் அசாதாரணமாக அதிகரித்துள்ளது.

இது முந்தைய அளவை விட இரண்டு மடங்கு அதிகமெனவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் மிகுந்த அவதானத்துடனும் உடல்நிலை தொடர்பில் கூடுதல் கவனம்; செலுத்துமாறும் அந்த நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

முகக்கவசங்களை தவறாமல் அணிய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தற்போதைய சூழ்நிலையில் வெளியில் சென்று விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக்கொளளுமாறும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

 


 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »