நேற்று (29) இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நேற்று இனங்காணப்பட்ட 586 பேரில் 209 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 199 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
மேலும் யாழ் மாவட்டத்தில் இருந்து 46 பேரும் பதுளை மாவட்டத்தில் இருந்து 4 பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.
ஏனைய பகுதிகளில் இனங்காணப்பட்டவர்களின் முழு விபரங்களையும் மேலே உள்ள படத்தில் காணலாம்.