6 நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்ட சம்பவம் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறிதொரு நபரின் பெயரில் பதிவாகியுள்ள சிம் அட்டை மற்றும் புதிய கையடக்கத் தொலைபேசி என அவர் பயன்படுத்தியிருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதவிர, கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை முதல் வியாழக்கிழமை வரை களுபோவில வைத்தியசாலை அருகே அவர் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், ரிஷாத் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
உறவினர் ஒருவரின் பெயரிலான சிம் அட்டையை அவர் பயன்படுத்துகின்றார் என்பதை விசாரணைகளின் போது அறிந்துகொண்ட சி.ஐ.டி.யினர், அந்த இலக்கம் எங்கிருந்து பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் கண்டறிந்த நிலையிலேயே ரிஷாட் மறைந்திருந்த வீட்டை நெருங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான பொலிஸார் அதிகாலை 3.00 மணியளவில் குறிப்பிட்ட வீட்டை சுற்றிவளைத்த போது ரிஷாட் கைது செய்யப்பட்டார்.