கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறியுள்ளதா என இன்னும் எம்மால் உறுதியாக கூற முடியாதுள்ளது. வைரஸ் சமூக பரவலுக்கான அடையாளங்கள் இலங்கையில் வெளிப்படவில்லை. எனவே அநாவசியமாக நாட்டை முடக்க முடியாது.
கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் புதிய தடுப்பூசியொன்றை வழங்குவதற்கு உலக சுகாதார நிறுவனம் எமக்கு அறிவித்துள்ளது.
இது வரை 26 பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
30 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளன.
ஒரு நாளைக்கு 8 ஆயிரம் PCR பரிசோதனைகள் வரை செய்யப்படுகின்றது. என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.