மினுவங்கொடையில் அமைந்துள்ள அதன் ஆடைத் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி COVID-19 தொற்றுள்ளமையை பிரண்டிக்ஸ் கண்டறிந்துள்ளது.
நிறுவனம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட கடுமையான நெறிமுறை, மற்றும் PHI மற்றும் இது தொடர்புடைய ஏனைய இலங்கை சுகாதார அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட உடனடி ஆதரவு நோயாளியை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவியது, மேலும் நோயாளியை உடனடி சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு சரியான நேரத்தில் அனுப்புவதையும் வைரஸ் மேலும் பரவுவதைத் மட்டுப்படுத்துவதையும் இது உறுதி செய்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுகிறோம், அவர்களின் ஆலோசனையைப் பெறுகிறோம் மேலும் இச்செயல்முறை முழுவதும் எங்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்குகிறோம். வைரஸ் தொற்றின் முழுமையான கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்ட வேலை தளத்தின் கடுமையான கிருமி நீக்கம் உட்பட, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
தொழிற்சாலையில் தொற்றாளருடன் தொடர்பு கொண்ட 45 தொழிலாளர்கள் உடனடியாக தங்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்களின் சுகாதார நிலையை உறுதி செய்வதற்காக அவர்கள் PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விரைவான பதிலுக்கும் இந்த நேரத்தில் தொடர்ந்து வழங்கப்பட்ட ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சுகாதார ஊழியர்களுடன் கலந்தாலோசித்து, எங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை எங்களது மிக உயர்ந்த முன்னுரிமையாக கருதி, தொடர்ந்தும் தொற்றுக்கு எதிரான எங்கள் கடுமையான நடவடிக்கைகளை கடைப்பிடிப்போம்.