குளியாப்பிட்டியில் இன்று (22) காலை மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக குளியாப்பிட்டிய பிரதான சுகாதார பரிசோதகர் டொக்டர் உத்பல குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி குளியாப்பிட்டி சுகாதார பரிசோதகர் பிரிவில் இதுவரை 44 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளர்களுக்கு நடத்தப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் குளியாப்பிட்டி சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பல இடங்களில் கொவிட் 19 வைரஸ் பரவியுள்ளதால் மக்கள் முழுமையாக சுகாதார அறியுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என டொக்டர் உத்பல குணசேகர கேட்டுள்ளார்.
வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குளியாப்பிட்டிய, நாரம்மல, தும்மலசூரிய மறறும் பன்னல ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.