Our Feeds


Sunday, October 11, 2020

www.shortnews.lk

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

 



covid-19 ஒழிப்புக்காக சுகாதாரப் பிரிவினரால் பெற்று கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும்போதும் அலுவலகத்தினுள் குறைந்தபட்ச அதிகாரிகளினால் சேவை வழங்கப்படும் போதும் ஏற்படக்கூடிய சிரமங்களை கருத்தில் கொண்டு தபால் மற்றும் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்திற்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஜனாதிபதி மக்கள் தொடர்பு பிரிவு- 0114354550/ 0112354550, Fax 011 2348855

ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் - 0112338073

ஜனாதிபதி நிதியம் - 0112354354 (4800/4814/4815/4818), Fax 011 2331243

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »