கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செவிலியர் கடந்த தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இனங்காணப்பட்ட குழந்தை சிகிச்சை பெற்று வந்த வார்டில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.