நாளை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கணித பாடத்திற்கு சாதாரண கணிப்பான்களை பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியும்.
இல்லையேல், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.