Our Feeds


Thursday, October 29, 2020

www.shortnews.lk

தனிமைப்படுத்தப்பட்ட 927 பேர் இன்று வீடு திரும்புகிறார்கள்.

 


_நேற்று 7,870 PCR சோதனைகள்; இதுவரை 477,156 சோதனைகள்
_நேற்று குணமடைந்த 32 பேரும் மினுவாங்கொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள்

முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 927 பேர் இன்றையதினம் (29) தங்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 927 பேர், PCR சோதனைகளுக்குப் பிறகு இவ்வாறு தங்களது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.

அதன்படி பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 927 பேர் இன்று வீடு திரும்பவுள்ளனர்.

    பியகம விலேஜ் 02 பேர்
    பிங்கிரிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 164 பேர்
    மீரிகமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 102 பேர்
    பஸ்துன்ரத ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 94 பேர்
    தம்பதெனிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 175 பேர்
    பெணிதெனிய ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 139 பேர்
    கொக்கல ரிசோர்ட் 22 பேர்
    தியகம விளையாட்டரங்கம் 13 பேர்
    விடத்தல்பளை ரிசோர்ட் 17 பேர்
    ரந்தம்பை 137 பேர்
    இராணுவ பயிற்சி பாடசாலை 34 பேர்
    வஸ்கடுவ சிற்ரஸ் ஹோட்டல் 28 பேர்


அந்த வகையில், முப்படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (29) வரை 58,697 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அத்துடன் தற்போது வர முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 70 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 7,039 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்றையதினம் (28) மாத்திரம் 7,870 PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதோடு, இலங்கையில் இதுவரை 477,156 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் குணமடைந்து வீடு திரும்பிய 32 பேரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »