சதோச நிறுவனங்களில் 600 ரூபாய்க்கும் மேற்பட்ட அளவில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சீனி கிலோ ஒன்று 85 ரூபாய்க்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி செய்பவர்கள் அதிகமாக சீனி கொள்வனவு செய்வதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.