இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரை 8152 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 3,933 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
4,203 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.