முன்னால் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு 70 % அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டாய பணி ஓய்வில் அனுப்பப்பட்டுள்ள முன்னால் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர் கட்சியில் இருக்கும் போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த அளவு பாதுகாப்பே தற்போது மைத்திரிபால சிரிசேனவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.