கம்பஹா பிரதேசத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக இன்று தொடக்கம் மேலதிகமாக 40 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்தள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து கொரோனா தொற்று ஏனைய மாவட்டங்களுக்கு பரவுவதை தடுப்பதே இதன் நோக்கமென்று குறித்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய மேலும் தெரிவித்தார்.