நோய் நிலைமையுடன் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிப்பதில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தாக்கத்தை செலுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இவர்கள் தமது கர்ப்பிணி கால கையேட்டை தனிமைப்படுத்தல் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் நோயினால் பீடிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படாத சந்தர்ப்பங்களில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்கள், பிரசவித்த தாய்மார்களுக்கான சிகிச்சைகளை 24 மணித்தியாலங்களும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரச வைத்திசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.