Our Feeds


Thursday, October 29, 2020

www.shortnews.lk

மீண்டும் முடக்கப்பட்டது பிரான்ஸ் - 24 மணி நேரத்தில் 244 பேர் மரணம்.

 

 மீண்டும் முடக்கப்பட்டது பிரான்ஸ் - 24 மணி நேரத்தில் 244 பேர் மரணம்.

வெளிநாட்டவர்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை ! | Sankathi24

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸில் மீண்டும் ‎நாடுதழுவிய ரீதியிலான முடக்கல் நிலை அமுலாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கமைய, பிரான்ஸில் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வரையில் இந்த நாடு ‎தழுவிய ரீதியிலான முடக்கம் அமுலாக்கப்பட்டிருக்கும் என சர்வதேச ஊடகங்கள் ‎செய்தி வெளியிட்டுள்ளன.

நட்சத்திர உணவகங்கள், மதுபானசாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற ‎வர்த்தக நிலையங்கள் இந்த காலப்பகுதியில் மூடப்பட்டிருக்கும் என ‎அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாடசாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியன தொடர்ந்தும் ‎செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கொவிட் 19 ‎தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 36 ஆயிரத்து 437 பேருக்கு கொவிட் 19 ‎தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‎

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »