பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை தினம் (06) இது தொடர்பிலான எழுத்து மூலமான விரிவுரைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நிதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.