2020 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்து எதிரிகளாக செயற்பட்டவர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை உலக உணவு திட்டம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக உணவு திட்டம், நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளதாக நோபல் பரிசு திட்டத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த அமைதிக்கான நோபல் பரிசினை முன்னதாக பல பிரபலங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இதன்படி, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜிம்மி கார்ட்டர், மலாலா, கொப்பி அனான், நெல்சன் மண்டேலா, கனிஸ்;ட மார்ட்டின் லுதர் கிங் ஆகியோருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.