பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுதொடர்பாக தெரிவிக்கையில்,2019ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று வெளியிடப்படவிருப்பதாக தெரிவித்தார்.
41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 270 பேர் பொறியியல் பீடத்திற்கு 405 பேர் என்ற ரீதியில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.