உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகளுடன் ஆலோசனை பெற்றுக் கொண்ட பின்னரே தான் 20ம் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வெளியிட்ட கருத்துக்கு புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் மஹ்மூத் ஆலிம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலமா சபையுடன் அலி சப்ரி ரஹீம் மேற்கண்ட எவ்வித ஆலோசனைக் கூட்டங்களையும் நிர்வாகத்துடனே தனிப்பட்ட முறையில் தன்னுடனோ நடத்தவில்லை என அவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் தெரிவித்துள்ளார்.
உலமா சபை தலைவர் தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள வீடியோ வடிவிலான ஆடியோவில் கேட்க்க முடியும்.