அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் 20 நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.
ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும் என்றார்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்