ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கூடுதல் அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் இன்று - 22.10.2020 பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட 20வது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
20ம் திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும்
எதிராக வாக்குகளும் 65 பதிவு செய்யப்பட்டன.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.