Our Feeds


Friday, October 9, 2020

www.shortnews.lk

கொரோனாவுக்கு எதிராக 2 மருந்துகள் இலங்கையில் தயாரிப்பு - சுதேச மருத்துவ அமைச்சு

 



கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்களுக்கும், தொற்று ஏற்பட கூடும் என கருதப்படுவர்களுக்குமான 2 வகை மருந்துகளை சுதேச மருத்துவ அமைச்சு தயாரித்துள்ளது.


ஆயர்வேத திணைக்களம் மற்றும் ஆயர்வேத மருந்தாக்கட் கூட்டுதாபனம் ஆகியன ஒன்றிணைந்து இந்த மருந்து வகைகளை தயாரித்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் திரவ மருந்தும் மற்றும் உறிஞ்சக் கூடிய மருந்து வகையும் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டுள்ள மருந்து வகை 100 வீதம் உள்நாட்டு மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

அவற்றுக்கு ´சதங்க பனய´ மற்றும் ´சுவதாரணி நோய்த் தடுப்பு பானம்´ என்று பெயரிட்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த மருந்துகள் தொடர்பான வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், இன்று (09) சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »