தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மாளிகாவத்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட அரபு பாடசாலை ஒன்றின் மாணவர்களை அதே பாடசாலையில் தனிமைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்ற 28 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களுமே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.