கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவி கல்வி கற்ற திவுலபிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவ, மாணவிகள் 1,500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) இரவு வரையில் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதார பரிசோதகர்கள் இடம்பெற்று வந்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
விஷேடமாக ஒலிபெருக்கி ஊடக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதிபர் ஊடக அனைத்து மாணவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் அனுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திவுலுபிட்டிய பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சேர்ந்த மாணவர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்றை தினம் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் கடமையாற்றிய அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் சிலர் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களை தேடி தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.