விகாரை ஒன்றில் வசித்து வந்த பிக்கு ஒருவருக்கு தனது தந்தையுடன் அன்னதானம் வழங்க சென்ற 13 வயது சிறுவன் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பிக்கு தலைமறைவாகியுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய, போதாகம பிரதேசத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அன்னதானம் வழங்கிய தந்தையும் சிறுவனும் திரும்பி சென்ன போது தனக்கு குளிர்பானம் வேண்டுமென பிக்கு கோரியதினால் குளிர்பானத்தை வாங்கி சிறுவனிடம் தந்தை கொடுத்தனுப்பிய போதே சிறுவனை பிக்கு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதுடன் இதனை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் சிறுவனுக்கு பணம் தருவதாகவும் கூறியுள்ளதாக குறித்த சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.