ஆறு புதிய அரசியல் கட்சிகள் இன்றைய தினம் தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிவித்துரு ஹெல உருமய, சிங்கள ராவய, அருணலு ஜனதா பெரமுன, மக்கள் சேவகர் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிச கட்சி மற்றும் சமத்துவ காட்சி ஆகியவையே இவ்வாறு புதிய அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளன.
2020 ஜனவரி மாதம் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையகத்தினால் கோரப்பட்டிருந்தது.
அதன்படி மொத்தம் 154 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றுள் 121 கட்சிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டுமிருந்தது.
அதிலிருந்து ஆறு புதிய கட்சிகள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.