Our Feeds


Monday, October 19, 2020

www.shortnews.lk

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 12 தலைப்புகளின் கீழ் பொது மக்கள் யோசனைகளை முன்வைக்க முடியும்

 



புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சு, பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது.

புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கருத்துகளை முன்வைக்க விரும்பும் அனைவருக்கும் அதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பவர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் செயலாளருக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் 12 தலைப்புகளின் கீழ் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

01. அரசின் தன்மை
02. அடிப்படை உரிமை
03. மொழி
04. அரச கொள்கையை வழிநடத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படை கடமைகள்
05. நிறைவேற்றதிகாரம்
06. பாராளுமன்றம்
07. மக்கள் கருத்துக்கணிப்பு, வாக்குரிமை, தேர்தல்
08. அதிகார பரவலாக்கல், அதிகாரப் பகிர்வு
09. நீதித்துறை
10. அரச நிதி
11. பொது மக்கள் பாதுகாப்பு
12. வேறு ஆர்வம் செலுத்தப்படுகின்ற துறைகளின் கீழ் மக்கள் கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்க முடியும்.

சுருக்கமான கருத்துகளையும் யோசனைகளையும் நிபுணர் குழு வரவேற்பதாகவும் நீதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் தமது கருத்துகள் மற்றும் யோசனைகளை பதிவுத் தபால் மற்றும் expertscommpublic@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றிற்கு அனுப்பிவைக்க முடியும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »