அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் தேசிய சூரா சபையுடன் இணைந்து மேற்கொண்ட 1000 வீட்டுத் தோட்டங்கள் திட்டத்தை நிறைவு செய்துள்ளதுடன், மேலும் பல பயிர் கன்றுகளை வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
நாட்டின் பொது இடங்களுக்கு நீண்ட கால வருமானத்தை வழங்கக்கூடிய மரங்களை நடவும் அவற்றை பாதுகாப்பதற்கும் நாங்கள் இங்கு முறையான திட்டங்களை ஏற்பாடுசெய்கிறோம்.
அதன்படி, இதன் முதற்கட்ட நடவடிக்கையானது எமது மேற்கு பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டு நடைபெற்றது. இந் நடவடிக்கையின் கீழ் பொது இடங்களில் இதுபோன்ற நீண்ட கால வருமானம் ஈட்டும் மரங்களை நடவும் அவற்றை பாதுகாப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றுவோம்.