மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா வைரஸ் (கொவிட் 19) கொத்தணியில் இதுவரை 1,591 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 1,036 பேர் அந்த ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிவதுடன் ஏனைய 555 தொற்றாளர்களும் அவர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்களாவர்.
இந்த தகவலை கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட திகதி விபரம்
முதல் வாரத்தில் ஒக்டோபர் 5 முதல் 11 வரை - 1186 ஒக்டோபர் 12 - 121 ஒக்டோபர் 13 - 90 ஒக்டோபர் 14 - 194 (காலை 6 மணி வரை)
இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுச் செய்த மேலும் 379 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தால் பராமறிக்கப்படும் மூன்று தனிமைப்டுத்தல் நிலையங்களில் இருந்தே அவர்கள் இன்று வெளியேறவுள்ளனர்.
இதுவரை 52,090 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்துள்ளதுடன் மேலும் 9,905 பேர் தொடர்ந்தும் 84 மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (13) மாத்திரம் 6,190 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மொத்தமாக இதுவரை 342,343 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.