நடந்தது என்ன.? எத்தனை பேர் கைது.?
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்இம்மாதம் 19ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு, தெஹிவளை பிரதேசத்திலிருந்துகுற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
ரிஷாத் பதியுதீனை கைது செய்ய வேண்டிய அவசியத்தில் பலர் உள்வாங்கப்பட்டு மிக நீண்ட நாள்போராட்டத்தின் பின்பே அவர் கைது செய்யப்பட்டார். அவரின் கைது மூலம் சில இனவாதிகளுக்கு மிக்கமகிழ்ச்சியான செய்தியாகவும் இருந்தது. முஸ்லிம் சகோதரர்கள், இனவாதிகள், அரசியல்வாதிகளால்முன்வைக்கப்பட்ட பல்வேறான போலிக் குற்றச்சாட்டுக்களின் பின்பு அவர் “மக்கள் சார்ந்த விடயமொன்றைமுன்னிறுத்தி கைது செய்யப்பட்டார்”
குறிப்பாக; கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலின் போது, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டுதற்போது புத்தளத்தில் சொந்த வாழ்க்கையை நடைமுறையாக வாழ்ந்துவரும் சுமார் 11 ஆயிரம் பேரின்வாக்குரிமை வடக்கில் உள்ளதால் அவர்களின் வாக்குரிமையை கோரி அவர்களினால் முன்வைக்கப்பட்டகோரிக்கையை ஏற்று (ஏலவே நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செய்ய உதவியது போல்), ரிஷாத்பதியுதீனீன் அமைச்சுக்கு கீழ் இருந்த, இடம்பெயர்ந்தோர் சார் திணைக்களத்தின் ஊடாக அரசின் முழுஒத்துழைப்புடன் இத்திட்டம் கடன் அடிப்படையில் நிதி பெற்ற பின், அக்கடனானது மக்களால் தேர்தல்நடைபெற்று 6 நாட்களில் மீள் செலுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் அனைத்து தற்போதுவெளியாகியுள்ளது. அதுவே தலைவரின் வாதமும் , அவரின் விளக்கமும். இச்சம்பவத்தினூடாக ரிஷாத் பதியுதீன்நிதியை அரசிலிருந்து பெற்று அதே நிதியை போக்குவரத்து சபையின் (அரசின்) திணைக்களத்திற்கேசெலுத்தியுள்ளார் தவிர தனது சொந்த பக்கட்டுக்குள் வைக்கவும் இல்லை. அவ்வாறு மக்கள் பணத்தைஹராமாக பெறும் நபரும் அல்ல.
ஆனால் இவ்விவகாரமானது, மக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்ற அடிப்படையில் சட்டமாஅதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாகவே கைது செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. தலைவர் ரிஷாத்பதியுதீனுடன் சேர்ந்து தலைவரின் அலுவலக ஊழியர்கள், நண்பர்கள் என சுமார் 09 பேர் ( ஏலவே 2வர்) கைதாகி அன்றைய நாள் 04 மணிக்கு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு 27ஆம் திகதி வரையான 08 நாட்கள்கொண்ட விளக்கமறியலில் வைக்கும் தீர்ப்பினை கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு வழங்கி இருந்தது.
அவ்வாறான நிலையில் தலைவர் ரிஷாத் கைது செய்யப்பட்ட அடுத்த தினம் மேலும் இரு பொறியிலாளர்கள்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களையும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டது. ஆக மொத்தமாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையாக சுமார் 11ஆகஅதிகரித்ததுடன் மேலும் ஒரு நபரை கைது செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக பத்திரிகை ஊடாக பார்க்ககிடைத்தது. இவர்களின் வழக்குகள் நாளை 27 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால், அவர்களுக்கானவிடுதலைக்காக உங்கள் பிராத்தனைகளில் இணைத்துக்கொள்ளுமாறும் கோருக்கின்றோம்.
ரிஷாத்தை கைது செய்யும் தேவை என்ன.?
ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் அரசியல் கட்சியொன்றின் தலைவர் மாத்திரமின்றி, சிறுபான்மை சமூகத்திற்குள் மிகமதிக்கக்கூடிய ஓர் அரசியல்வாதி என்பது யாவரும் அறிந்த விடயம். கடந்த 2010(In thought) ஆம் ஆண்டு முதல்இவரின் அரசியல் வட-கிழக்கிற்கு அப்பால் நாடும் முழுவது வியாபித்துப்போனது . இதன் மூலம் சில முஸ்லிம்அரசியல்வாதிகளின் தனிக்கட்சி ராஜா நாடகம் மக்கள் மத்தியில் தோற்றுப்போனது யதார்த்தம்.
குறிப்பாக பெரும்பான்மை சமூகத்தின் வாழும் முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை தேவை முதல், தன்னால் ஏன்றஉதவிகளை மக்கள் சேவகன் என்ற அடிப்படையில் மேற்கொண்டார் . அதன் பின் முஸ்லிம் சமூகத்தின் மீதுஇனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட அட்டூளியங்களின் போது அதை தடுக்கும் நடவடிக்கைகளில் மிகதீவிரமாக களமிறங்கி செயற்பட்ட பின், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதிகளின் கோஷங்களுக்குஎதிராக மிக தீவிரமாக செயற்பட்டு முஸ்லிம் மக்களின் அரசியல் காவலனாய், இறைவனின் உதவியுடன்செயற்பட்டார்.
2014 ஆம் ஆண்டு ஞானசார வடக்கில் தலைவர் ரிஷாத் பதியுதீனினால் மீள் குடியேற்றப்பட்ட மக்களின்வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் காடுகள் அழிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டது என்ற கோஷங்கள் மிகதீவிரமாக இனவாத நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ரிஷாத் பதியுதீன் மீதான இனவாத விசமிகளின்அள்ளூளியங்கள், கைது கோஷங்கள் கைது நாள் வரைக்கும் தொடர்ந்துகொண்டே சென்றது. அதற்குஇடையில் முஸ்லிம் சில அரசியல் வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட கழ்ப்புணர்ச்சியில் மேற்கொள்ளப்பட்டஅரசியல் நாடகங்களுமே இந்த கைது கோஷங்களுக்கு பின்னால் உள்ள இனவாதிகளின் ஆட்டமாகும்.
அதன் பின் 52 நாள் அரசியல் புரட்சியின் பின்னர் தலைவர் ரிஷாத் பதியுதீன் மீதான கோபங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கும் பொழுது, ஏப்ரில் 21 குண்டுத்தாக்குதல் நடைபெற்றன் பின்னர் முஸ்லிம் சமூகத்தின்மீதான விமர்சனங்கள் அதிகரித்த வேலை ரிஷாத் பதியுதீன் மீதான பழைய கோஷங்களை கொட்டித்தீர்க்கசரியான வாய்ப்பாக ஏப்ரில் 21 தாக்குதல் மீதான போலிக்குற்றச்சாட்டுக்கள் ரிஷாத் மீது அம்புகளாகஎறியப்பட்டது மாத்திரமின்றி அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் 05 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இறுதியில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வகையில் வெளியேறினார்.
“சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் இறைவன்” தலைவர் ரிஷாத் மீதான வழக்கு நாளை (27) எடுத்திக்கொள்ளப்படவுள்ளதால். உங்கள் பிராத்தனைகளை தலைவர் ரிஷாத் விடுதலையாக வேண்டும் எனபிரார்த்திப்பதுடன். இனவாதிகளும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர்களும் தோல்வியடைய வேண்டும்என்ற பிரார்த்த்னைகளில் ஈடுபடுங்கள் .
தலைவரின் தொண்டனாய்,
(சப்னி அஹமட் - அட்டாளைச்சேனை )