Our Feeds


Monday, October 12, 2020

www.shortnews.lk

டெங்கு நோயினால் மட்டக்களப்பில் ஒருவர் மரணம் - 09 மாதத்தில் 2,248 பேருக்கு டெங்கு

 


 

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது.


இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற 3 வது மரணமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரையும் 16 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நோயாளர்களும், வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 டெங்கு நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருநோயாளருமாக மொத்தம் 16 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வாகரை, செங்கலடி, ஏறாவூர், வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த 09 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 248 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வரும் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »