ப்ரெண்டிக்ஸ் தலைமையக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களில் ஒருவரின் மனைவி இரத்மலானை அரச வங்கி ஒன்றில் பணிபுரிவதால் அந்த வங்கி தற்காலிகமாக இன்று காலை மூடப்பட்டது. இந்த ஏழு பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேவேளை பொரளை பகுதியில் இன்று காலை ஆறு கடைகள் மூடப்பட்டன. கொரோனா தொற்றுக்குள்ளான சிலர் அந்த கடைகளுக்கு சென்றுவந்தமை தெரியவந்ததையடுத்து இவ்வாறு அந்த கடைகள் மூடப்பட்டன.