உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்கு மூலம் ஒன்றை வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) ஆஜராகியிருந்தார்.
ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 7 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின் வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.