தெஹியோவிட பிரதேசத்தை சேர்ந்த மீன் விற்பனையாளர்கள் ஏழு பேர் மற்றும் அவர்களின் ஒருவரின் மனைவிக்கு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அனைவரும் பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, மறு அறிவித்தல் வரையில் தெஹியோவிட, இஹல தல்தூவ, பஹல தல்துவ, எபலபிடிய மற்றும் திம்பிரிபொல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிக்கப்படுவதாக தெஹியோவிட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.