உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2 ஆவது நாளாக இன்று (12) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் அங்கிருந்து வௌியாகி உள்ளார்.
அவரிடம் சுமார் 5 மணி நேர விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் அவரை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்னர் அவர் கடந்த 5 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.