தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த சில நிறுவனங்களுக்கான தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர் சேவைகளுக்கான தரம் 3 அதிகாரிகளுக்கான செயற்திறன் தேர்வு, கிராம அதிகாரி சேவையின் தரம் 3 அதிகாரிகளுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறனுக்கான விரைவான தேர்வு ஆகியவை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளன.
மேலும், இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வு மற்றும் இலங்கை சுங்கத் துறையின் சுங்கக் கட்டுப்பாட்டாளர்களுக்கான தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.