குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரிக்கு சட்டமா அதிபர் அழைப்பாணை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை விசாரணை அறிக்கைகளுடன் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.