சிலாபம் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக முதலாவது பிசிஆர் பரிசோதனையில் இனங்காணப்பட்ட போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனுக்கு சிகிச்சையளித்த் சிலாபம், பங்கதெனிய வைத்தியருக்கும் கொரோன தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
17 மானவர்களுடன் கம்பஹா பகுதியில் இடம்பெற்ற வகுப்பிற்கு வேன் ஒன்றின் மூலம் வருகை தந்த 17 வயதுடைய மாணவன் ஒருவன் கடந்த 6 ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது குறித்த மாணவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதை அடுத்து அவரை சிலாபம் வைத்தியசாயின் கொரோனா தடுப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
குறித்த மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 33 பேர் இதனையடுத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுருந்தனர்.
இதனையடுத்து குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது பிசிஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.