அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்க தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்திருக்கின்றனர்.
ஆளும் கட்சியின் உயர் மட்ட பிரமுகர்களுடன் நடத்திய பல சுற்று சந்திப்புக்களை அடுத்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இவ்வாறு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
20வது திருத்தத்தை எதிர்த்தாலும் அது நிறைவேறவே போகிறது. அதனை ஆதரிப்பதன் மூலம் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசிடமிருந்து பெற்றுக் கொடுப்போம். இது குறித்து கட்சியின் மேல்மட்டத்தை அறிவுறுத்தியுள்ளோம்.
கட்சி ஆதரவை வழங்கா விட்டாலும் நாங்கள் 20வது திருதத்தை ஆதரிப்போம்.
அதில் மாற்றமில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இவ்வாறு ஆதரவு வழங்குவோருக்கு அடுத்த அமைச்சரவையில் முக்கிய சில பொறுப்புக்களை வழங்க ஆளும் கட்சியின் மேல் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிந்தது.