கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான Save the Pearls என்ற அமைப்புக்கு பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பண உதவி வழங்கும் கட்டார் நிறுவனத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டுள்மை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் மூலம் 13 மில்லியன் ரூபா நிதி Save the Pearls நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்டார் நிறுவனம் பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி வழங்கி தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். ஆனபடியினால் குறித்த நிறுவனம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.